மேட்டுர் ஜிஹெச்.,சில் சித்த மருத்துவ முகாம்

மேட்டூர், ஜன.13: மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவ முகாம், பாரம்பரிய உணவு திருவிழா ஆகிய நிகழ்ச்சிகளை சேலம் கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  நேற்று மேட்டூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 3வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது. இதில் மூலிகை கண்காட்சி, இலவச சித்த மருத்துவ முகாம், பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சித்த மருத்துவ முகாமில் ஆஸ்துமா, தோல் நோய், காமாலை, ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், எம்எல்ஏ செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சித்த மருத்துவர்கள், வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: