2 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கல்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பர்கூர் மற்றும் பேரிகை கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த கமலக்கண்ணன் மற்றும் எஸ்.புட்டம்மா ஆகியோர், பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். இவர்கள் இருவரும் சமீபத்தில் உயிரிழந்ததையடுத்து, இவர்களுக்கான காப்பீட்டுத் தொகை தலா ₹2 லட்சத்துக்கான காசோலையை, அவர்களின் வாரிசுதாரர்களிடம் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் வழங்கினார். இதில் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரேணுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21...