இலக்கியம்பட்டியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்

தர்மபுரி, ஜன.13: தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியில், முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என, திமுக ஒன்றிய துணை அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த, திமுக ஒன்றிய துணைத்தலைவர் காளியப்பன் (42), இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சுதா ரமேஷ், துணைத்தலைவர் வித்யா வெங்கடேசனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பஸ் ஸ்டாப், செந்தில்நகர் பஸ்ஸ்டாப், அழகாபுரி, கருவூலகாலனி, எஸ்பி ஆபீஸ் முன் பகுதியில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. தினசரி ஆயிரகணக்கான வாகனங்கள் இந்த பஸ் ஸ்டாப்களை கடந்து செல்கின்றன.

இலக்கியம்பட்டி ஊராட்சியில், தீயணைப்புதுறை அலுவலகம், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபகழக அலுவலகம், எஸ்பி ஆபீஸ், கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், சிஇஓ அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், கால்நடைதுறை அலுவலகம் என முக்கியமான அரசு அலுவலகங்கள் இங்கு தான் உள்ளன. எனவே, குற்ற சம்பவங்களை தடுக்கவும், கண்காணிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இலக்கியம்பட்டி ஊராட்சி பகுதியில் முக்கிய இடங்களில், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : literature bar ,
× RELATED பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் 1...