2 இடங்களில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் திருச்சி பஸ் நிலையங்களில் தொடர் திருட்டு 2 நாளில் 4 சம்பவத்தில் 16 பவுன் அபேஸ்

திருச்சி, ஜன.13: திருச்சி பஸ் நிலையங்களில் பயணிகளின் கைப்பையை குறி வைத்து திருடர்கள் களமிறங்கியுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் நான்கு பயணிகளின் கைபை திருடு போயுள்ளது. இதில் 16 பவுன் நகைகளை பயணிகள் பறிகொடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் பரவை, பேங்க் காலனி, ஏஐபிஇஏ நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(38). சொந்த வேலையாக மதுரையிலிருந்து திருச்சிக்கு வந்தார். பின் மதுரை புறப்பட்டார். அப்போது தனது பையை பஸ்சில் வைத்துள்ளார். அவரது பையிலிருந்த 7 பவுன் செயினை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். திருச்சி பாலக்கரை, மரியம்நகரை சேநர்தவர் மைக்கேல் துரைராஜ் மனைவி ஜான்சி சரளா(36). இவர் வீட்டுக்கு செல்வதற்காக சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒருவன் அவரது கைப்பையை பறித்துச் சென்றான். அதில் 4 பவுன் செயின் இருந்துள்ளது.

அதேபோல, லால்குடி தாலுகா பரமசிவபுரத்தை சேர்ந்தவர் ஆதம்ஷா(62). இவர் லால்குடி பஸ்சில் செல்வதற்காக ஏறி உள்ளார். அப்போது அவரது கைப்பையை ஒருவன் திருடி சென்றுவிட்டான். அவரது பையில் அரை பவுன் மோதிரம் இருந்துள்ளது. மேலும், அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர், மனுளி தெற்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார் மனைவி அமுதா(32), திருச்சியிலிருந்து ஊருக்கு செல்ல பஸ் ஏறி உள்ளார். அவரது கைப்பை திருடுபோனது. அதில் 3 பவுன் செயின், ஒரு பவுன் தங்க காசு, அரை பவுன் மோதிரம் 2 என மொத்தம் 4.5 பவுன் நகை இருந்துள்ளது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பயணிகளின் கைப்பையை குறிவைத்து களமிறங்கும் திருடர்கள் போக்குவரத்து இடையூறு புகாருக்கு வாட்ஸ்அப் எண்

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். சிக்னல்களில் பயணிகளை இறக்கி, ஏற்றக் கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது.    வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. மேற்படி விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது பற்றிய தகவலை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கும் மற்றும் மாநகர காவல் அலுவலக வாட்ச் அப் எண் 96262-73399க்கும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: