அவனியாபுரத்தில் சிலம்பாட்ட சாம்பியன் போட்டி

அவனியாபுரம். ஜன. 13: அவனியாபுரத்தில் நடைபெற்ற சிலம்பாட்ட சாம்பியன் போட்டியில் சுருள் கத்தி, தீப்பந்தம், வாள் சண்டை, சிலம்பு சண்டை போன்றவற்றை செய்து காண்பித்து மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

அவனியாபுரத்தில் எஸ்கேஎம் சிலம்பம் பள்ளி சார்பாக உடல் ஆரோக்யம், மன நிம்மதி, வீரம் போன்றவற்றை தரும் பாரம்பரிய கலைகளான யோகா, சிலம்பத்தை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.

இதில் திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பு, வாள், சுருள் கத்தி, தீப்பந்தம்  போன்ற வீர விளையாட்டின் கலைகளை மாணவர்கள் தனித்திறமை மூலம் அற்புதமாக வெளிக்காட்டினர். எதிரிகளிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது பற்றியும் சிலம்பு சண்டை மூலம் செய்து காட்டினர்.தொடர்ந்து சுருள் சண்டை, வாள் சண்டை, தீப்பந்தம், டம்ளரில் தண்ணீர் கீழே சிந்தாமல் சிலம்பு சுற்றுதல், மான் கொம்பு சண்டை, கத்தி சண்டை பொது மக்களிடையே பாராட்டை பெற்றது.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: