வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்

திருப்பூர், ஜன.13: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2020 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், முன்னிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டவர் கூறியதாவது, வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின் பேரில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின் படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்திற்குள் முடிவு செய்ய வேண்டும்.

மேலும், வாக்காளர் பட்டியியலில் நீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தினை முழுமையாக ஆய்வு செய்யவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஜன.1ம் தேதி 2020 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் - 2020 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி கடந்த டிச.23ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவினாசி, காங்கயம், தாராபுரம் , உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2484 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய 1030 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யவிரும்புவோர், பெயர் நீக்கம் செய்யவிரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்புமாறியவர்கள், முகவரிமாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் கடந்த 4ம் தேதி, 5ம் தேதி, 11ம் தேதி மற்றும் நேற்று (12ம் தேதி) அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் திருமுருகன் பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமினையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் கருணாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் நான்கு முகாம்களில் இதுவரை நடந்த சிறப்பு முகாம் விவரம், தாராபுரம், காங்கயம்,  அவினாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், உடுமலை மற்றும் மடத்துக்குளம்  ஆகிய சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் படிவம் 45,180 பெயர் நீக்கல் 2,683 பெயர் திருத்தம் 4,646 தொகுத்திக்குள் முகவரி மாற்றம்  3,827 என மொத்தம் 56,336 விண்ணப்பங்கள் நேற்று பெறப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Related Stories: