பொங்கல் விளையாட்டு போட்டி

பொங்கலூர்,ஜன.13: காவல்துறை சார்பில் மாநிலம் முழுவதும் காவல்துறை மற்றும் பொது மக்களின் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் உட்கோட்ட காவல்துறை சார்பில் பொங்கல்  விழா பல்லடம் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பல்லடம் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், எஸ்.ஐ.க்கள் விஜயகுமார் அருள் ஆரோக்கியதாஸ் முன்னிலை வகித்தனர். விழாவின் போது ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கூடைப்பந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, மட்டைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அவிநாசி:அவிநாசி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த பொங்கல் விளையாட்டுவிழா  போட்டிகளுக்கு அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில்  கயிறு இழுத்தல் போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி,  சாக்குப்போட்டி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு  விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்றன. அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர் ஜெகதீசன் கலந்து கொண்டு,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்திப் பேசினார். விழாவில்,  குன்னத்தூர்  இன்ஸ்பெக்டர் சம்பங்கி, அனைத்து மகளிர் காவல்நிலைய  இன்ஸ்பெக்டர் சரசுவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், போலீசார்  குடும்பத்தினர், பொதுமக்கள் இணைந்து பங்கேற்ற இந்த விளையாட்டுப்போட்டிகளில்  300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: