பழையகோட்டைww மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை

காங்கயம், ஜன.13: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் விற்பனைக்காக 185 கால்நடைகளை கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 90 கால்நடைகள் ரூ.35 லட்சத்திற்கு விற்பனையானது.

மாடுகள் கருவுற்றதா என கண்டறிய ரூ.2.50 லட்சம் செலவில் புதிய ஸ்கேன் ஒன்று சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரு பிடித்த 30 நாட்கள் முதல் சோதனை செய்யப்படும். இதனால் கன்றுகள் இதயத்துடிப்பு எளிதாக கண்டறிப்படும். இந்த சோதனைக்கு வெளி இடங்களில் ஒரு மாட்டுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் சந்தைக்கு வரும் மாடுகளுக்கு ரூ.350 மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அதுவும் பரிசோதனை செய்யும் மருத்துவருக்கு வழங்கப்படுவதாக சந்தை நிர்வாகி தெரிவித்தார்.

Related Stories: