த.மா.கா சார்பில் சமத்துவ பொங்கல்

ஈரோடு, ஜன. 13:  ஈரோடு மத்திய மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது.  இந்நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் விடியல்சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாநில துணை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சமத்துவ பொங்கலையொட்டி அலுவலகம் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சுந்தரசாமி, மண்டல தலைவர் மணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேலு, வட்டார தலைவர்கள் ரகுபதி, புவனேஸ்வரன், மகளிரணி நிர்வாகிகள் விஜயா, கண்ணம்மா, தொழிற்சங்க தலைவர் ஆவின் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: