ஈரோடு கலை அறிவியல் கல்லூரி 44வது பட்டமளிப்பு விழா

ஈரோடு, ஜன. 13: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 44வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் கடந்த 11ம் தேதி நடந்தது. தி முதலியார் கல்வி அறக்கட்டளையின் தலைவர் முருகேசன் முன்னிலையில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசன் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 21 பேருக்கு தங்கபதக்கமும், 480 மாணாக்கர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார். இவ்விழாவில், தி முதலியார் கல்வி அறக்கட்டளை துணைதலைவர்கள் மணி, மாணிக்கம்,  ராஜமணிக்கம், நிர்வாக உறுப்பினர்கள், கல்லூரியின் துறைதலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக செயலாண்மை துறைதலைவர் கிருஷ்ணமூர்த்தி, மின்னணுவியல் துறைதலைவர்  வெங்கடாசலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: