நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான பண்ணை பள்ளி

புதுச்சேரி, ஜன. 13:  பாகூர் உழவர் உதவியகம், பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான உயர் தொழில்நுட்பங்கள் பற்றிய பண்ணை பள்ளி குருவி நத்தம் வருவாய் கிராமமான சோரியாங்குப்பத்தில் நடந்தது. பாகூர் வேளாண் அலுவலர் மாசிலாமணி வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் விஜயகுமார் நிலக்கடலை தாக்கும் பூச்சி பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் முறை குறித்தும் எடுத்துரைத்தார்.

நிலக்கடலையின் பருவகாலம், விதை தேர்வு, விதை நேர்த்தி, உர நிர்வாகம், நுண்ணூட்ட உரப்பரிந்துரை, சாகுபடி செலவு, களை நிர்வாகம் பற்றி ரவி எடுத்துரைத்தார். இதில் பாகூர், சோரியாங்குப்பம், இருளன்சந்தை, குருவி நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண் அலுவலர் கலியமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் பாஸ்கரன், முத்துகுமரன், ராஜேந்திரன், தனசேகரன் மற்றும் ஆத்மா வேளாண் தொழில்நுட்ப மேலாளர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: