×

வீராம்பட்டினத்தில் நாளை சமத்துவ பொங்கல் விழா

புதுச்சேரி, ஜன. 13:  புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி தெற்கு மாநில திமுக சார்பில் இந்த ஆண்டுக்கான சமத்துவ பொங்கல் விழா அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் குளத்தின் அருகே நாளை (14ம் தேதி) காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு அடுப்பு மூட்டி, புதுப்பானையில் பொங்கலிட்டு விழாவை கொண்டாடுகின்றனர்.

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றுகின்ற கிராமிய இசை மற்றும் நாட்டியத்துடன் தொடங்கும் இவ்விழாவில் திமுக மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர்
கூறியுள்ளார்.

Tags : Equality Pongal Festival ,Veerapattinam ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா