சரவணம்பாக்கம் ஊராட்சியை விழுப்புரத்தோடு இணைத்ததற்கு சிவனுக்கு நன்றி தெரிவித்த மக்கள்

திருவெண்ணெய்நல்லூர், ஜன. 13: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சரவணம்பாக்கம் ஊராட்சியை விழுப்புரத்துடன் இணைத்ததற்கு சிவனுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்கு மிக அருகாமையில் உள்ள சரவணம்பாக்கம் ஊராட்சி மற்றும் அதற்கு உட்பட்ட கோவுலாபுரம், கொத்தனூர் உள்ளிட்ட கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் சிவன் கோயிலில் மூன்று கிராமங்களையும் திருவெண்ணெய்நல்லூர் தாலூகாவுடன் இணைத்து விழுப்புரம் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசு, 3 கிராமங்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுடன் இணைத்து அரசாணை வெளியிட்டது. இதையடுத்து சிவனிடம் வைத்த வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக கிராம மக்கள் சிவனுக்கு  நன்றி செலுத்தும் வகையில் நேற்று சிறப்பு பூஜை செய்து 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.

Related Stories: