×

வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, ஜன. 13: கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 330 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், வாக்காளர் தொகுதி மாற்றம் உள்ளிட்டவைக்கு அந்தந்த வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்கு முன்பு நடந்த முகாமில் எத்தனை பேர் பெயர் சேர்த்தலில் மனு அளித்தனர் உள்ளிட்ட விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். வாக்காளர் பெயர் சேர்த்தல் விண்ணப்பம் குறைவாக உள்ளது, வாக்காளர் பெயர் சேர்த்தல் அதிகரிக்க வேண்டும் என வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது கள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Special Camp ,
× RELATED விவசாயக் கடன் சிறப்பு முகாம்: கலெக்டர் தகவல்