விவேகானந்தர் ஜெயந்தி விழா

உடன்குடி,ஜன.13: உடன்குடி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் இந்து அமைப்புகள் சார்பில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, சேவாபாரதி, பாரத மாதா சேவா சங்கம், இந்து மகாசபா, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பில் சுவாமி விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்குடி ஒன்றியத்தில் பெருமாள்புரம், முத்துகிருஷ்ணாபுரம், தேரியூர், உதிரமாடன்குடியிருப்பு, கந்தசாமிபுரம், வைத்தியலிங்கபுரம் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்தது. தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞர் முன்னணி சார்பாக சுவாமி விவேகானந்தர் 158வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து புஷ்பாஞ்சலி செய்தனர். தொடர்ந்து தேசம் காக்க, மாணவர்களின் ஒற்றுமையை வளர்க்க, காமராஜர் கல்லூரி முன்பு மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் விவேகானந்தர் ரத்ததான இயக்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமில் 10க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் தலைமை வகித்தார். இந்து இளைஞர் முன்னணி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ராஜா, வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோத், தெற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு மாணிக்கம், சங்கர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து குமார் மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், கல்லூரி மாணவர்கள் அருண், முரளி,அஜித், தீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மெயின்பஜாரில் சுவாமி விவேகானந்தர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் கசமுத்து, திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராமசாமி, ஆறுமுகநேரி நகர தலைவர் வெங்கடேசன், நகர செயலாளர்கள் சிவலிங்கம், கந்தசாமிமணி, கிளைக்கமிட்டி பொறுப்பாளர்கள் பாபு, மாரிமுத்து, வின்னேஷ், சிவராமன், பாஸ்கர், பற்குணப்பெருமாள் மற்றும் நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் கலந்து கொண்டனர்.

இதேபோல் காயல்பட்டினத்தில் பாஜ சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. பாஜ மண்டலத்தலைவர் பண்டாரம், நகர பொதுச்செயலாளர் மகேந்திரன், சந்திரசேகரன், சங்கர்ராஜ், முத்துக்குமார், மனோகர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: