×

அருமனை பொங்கல் விழா: 500 கலைஞர்கள் பங்கேற்ற கலாச்சார ஊர்வலம்

அருமனை, ஜன.13: அருமனை வட்டார அனைத்து இந்து சமுதாயமும், ஆலய நிர்வாகங்களும் இணைந்து நடத்திய 16வது பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, மாலையில் அனைத்து இந்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஆகியன நடந்தது. இரண்டாவது நாளான நேற்று மாலை புண்ணியம் அய்யா நிழல் தாங்கலில் கலாசார ஊர்வலம் துவங்கியது. விழாக்குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் தொழிலதிபர் கமலன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். யானைகள், குதிரைகள், மாட்டு வண்டிகள், காவிக்கொடிகள், முத்து குடைகள் அணிவகுக்க மயிலாட்டம், தெய்யம், கதகளி, மயிலாட்டம், அலங்கார ரதங்கள் உட்பட 500க்கு மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். சமயவகுப்பு மாணவிகளின் கலை நிகழ்சசிகளும் நடந்தது. ஊர்வலம் நெடியசாலை, பனிச்சவிளை, அருமனை சந்திப்பு வழியாக நெடுங்குளம் சந்திப்பில் நிறைவடைந்தது. ஊர்வலத்தை பார்க்க சாலையின் இரு பக்கமும் பெண்கள் உட்பட ஏராளம் பொதுமக்கள் குவிந்திருந்தனர். மாவட்ட எஸ்.பி(பொறுப்பு) ராஜ ராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொங்கல் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

விழாவிற்கு விஜயகுமார் தலைமை வகித்தார்.  அருமனை ேபரூராட்சி முன்னாள் தலைவர் சுஜி, வெள்ளாங்கோடு ஊராட்சி தலைவர்  கிறிஸ்டோபர், மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர், மேல்புறம் வடக்கு  ஒன்றிய பா.ஜ., தலைவர் சதீஷ் சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்  சந்திரன், கடையல் மண்டல் தலைவர் மனோகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர்  விஜயகுமார், செல்வ ஆனந்த், செல்வ அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சேவாபாரதி மாநில பொறுப்பாளர் சுமதி மனோகரன் குத்துவிளக்கு ஏற்றினார். விழாக்குழு அமைப்பாளர் மதன் வரவேற்றார். வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த மகராஜ் ஆசி கூறினார். தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை தொடங்கி வைத்து, நல உதவிகள் வழங்கி பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ. தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆர்எஸ்எஸ் நிர்வாகி முத்துக்குமார், பா.ஜ., துணை தலைவர் எம்.ஆர்.காந்தி, பா.ஜ., உள்ளாட்சி பிரிவு மாநில செயலாளர் ஜெயசீலன், இந்துமுன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

Tags : Arumanai Pongal Festival ,artists ,
× RELATED புத்தகம் படித்து கதை சொல்லும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்