தெருக்கூத்து கலைஞர்கள் பேரணி

திண்டிவனம், ஜன. 12:  விழுப்புரம் மாவட்ட தெருக்கூத்து கலைஞர்கள், உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் மாநாடு திண்டிவனத்தில் நடைபெற்றது. இதையொட்டி திண்டிவனம் ரயில் நிலையம் பிள்ளையார்கோவில் அருகே தொடங்கிய மாநாட்டு பேரணியில் கலைஞர்கள் பல்வேறு வேடமணிந்து நேரு வீதி வழியாக செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு பேரணியாக சென்றனர்.நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதிய வயதை 50 ஆக குறைக்க வேண்டும். அரசு விழாக்களில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பேருந்து, ரயில்களில் இலவச பாஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விழா மேடையில் பல்வேறு கலைஞர்கள் பழமை வாய்ந்த பாரம்பரிய நாடகங்களை நடித்துக் காட்டினர். நிகழ்ச்சியில் பெரியசாமி, செந்தில், தாமோதரன், மண்ணாங்கட்டி உள்ளிட்ட மூத்த இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: