மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பொங்கல் மண்டபம் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன.12: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட அங்காளம்மன் கோயில் உள்ளது. பக்தர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த அடுப்புகளுடன் கூடிய பொங்கல் மண்டபம் எவ்வித காரணமும் இல்லாமல் விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையால் இடிக்கப்பட்டது.

இதனால், நிரந்தரமான ஒரு இடத்தில் பொங்கல் மண்டபம் அமைக்க கோரி அங்காளம்மனின் பக்தையான சென்னை நங்கநல்லூரை சேர்ந்த எஸ்.நாகஜோதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், விழுப்புரம் மாவட்ட இணை ஆணையர்,  கோயில் செயல் அதிகாரி ஆகியோருக்கு மண்டபம் கட்டக்கோரி மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்துக்கு   உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: