நோயாளிக்கு கல்லீரல் புற்றுநோய் கட்டி ஆபரேசனில் அகற்றம்

புதுச்சேரி, ஜன. 12: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணன் (50) (ெபயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி அரியூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. 12 செ.மீ அளவுள்ள பெரிய கட்டியை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ரவிசங்கர் மற்றும் பொதுஅறுவை சிகிச்சை பேராசிரியர்கள் சிவராஜன், தீபு, செல்வகுமார், மயக்க மருந்து துறை நிபுணர்கள் ரகுராமன், ராதாகிருஷ்ணன், ஐஸ்வர்யராஜன், குணசீலன், மது, ஆர்த்தி அடங்கிய குழுவினர் முழுமையாக நீக்கினர். 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி கண்காணிக்கப்பட்டு பூரண குணம் அடைந்த பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இக்கல்லீரல் அறுவை சிகிச்சை முதல் முறையாக இம்மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்ததற்காக மருத்துவமனை தலைவர் ராமச்சந்திரன், இயக்குனர் மகாதேவன், முதல்வர் ரத்தினசாமி மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அறுவை சிகிச்சை குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இம்மருத்துவமனையில் அனைத்து உறுப்பு புற்றுநோய்களுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டு சேவை செய்யப்படுகிறது.

Related Stories: