×

திருக்களார், இடும்பாவனம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு கறுப்புக்கொடி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச.16: திருக்களார் ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் கறுப்பு கொடி ஏந்தி அரசுக்கு எதிரான கண்டன முழக்கங் கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருக்களார் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு 2018 - 2019ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையில் நடந்த முறைகேடு களை கண்டித்தும், திருக்களார் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் அரசு அதிகாரி களை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிராம மக்கள் கறுப்பு கொடி ஏந்தி அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பி திருக்களார் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோட்டூர் ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியின் ஒன்றிய செயலாளர் கார்த்திக், பிச்சைக்கண்ணு, நடராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் முடிவில் திருக்களார் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் நிறை வேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை முற்றிலும் புறக்கணிப்பதோடு அடுத்தகட்டமாக பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க போவதாக ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி சர்வமானியம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த கிராமத்திற்கு வரும் மண்சாலையானது படுமோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் சுமார் 45வருடங்களாக போராடி கூறுகின்றனர். ஆனாலும் அதிகாரிகள், தொடர்ச்சியாக வரும் மக்கள் பிரதிநிதிகள் கண்டுக்கொள்வதில்லை, இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்பொழுது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் விரக்தியடைந்த இப்பகுதி மக்கள் நேற்று தாங்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து கிராமத்தில் பேனர் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : Demonstrators ,blacksmiths ,facilities ,Idumbavanam ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...