×

கலெக்டர் எச்சரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 235 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

மன்னார்குடி, டிச.16: திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் 27 மற்றும் 30 ஆகிய தினங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுவதையொட்டி வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களிலும் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் 32 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 557 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 139 மண்டல அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பயிற்சி வகுப்புகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டம் முழுவதிலும் 1,771 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள 11 ஆயிரத்து 235 வாக்கு பதிவு அலுவலர்களுக்கு, வாக்குச் சாவடியில் தலைமை அலுவலரின் பணி, முதலாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, மூன்றாம் வாக்குப்பதிவு அலுவலருக்கான பணி, வாக்குப்பதிவின் முடிவில் செய்ய வேண்டிய பணிகள், வாக்கெடுப்புக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் பொழுது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப் பட்டது.இந்நிலையில், முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள மன்னார்குடி ஒன்றியத்தில் தேர்தல் பணியாற்ற உள்ள வாக்கு சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு மன்னார்குடியில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ (பொ) ஜெயபிரித்தா தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பை வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஞானம் துவக்கி வைத்தார். பயிற்சி வகுப்பிற்கு மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து மன்னார்குடி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஞானம் கூறுகையில்,மன்னார்குடி ஒன்றியத்தில் இருந்து 51 ஊராட்சி மன்ற தலைவர்கள், 368 வார்டு உறுப்பினர்கள், 22 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒன்றியத்தில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 365 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 213 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 16 மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களில் சுகாதாரமான குடிநீர், ஜெனரேட்டர் வசதி, மாற்று திறனாளிகள் மற்றும் முதியோர் எளிதாக வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்வு தளம் உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படை வசதிகள் செய்யப் பட்டுள்ளன.மன்னார்குடி ஒன்றியத்தில் 1270 பேர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த பட்டு ள்ளனர். தற்போது அவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி நேற்று அளிக்கப் பட்டுள்ளது. வரும் 22 மற்றும் 26 ம் தேதிகளில் 2, 3ம் கட்ட பயிற்சி வகுப்பு கள் நடைபெற உள்ளன. இவ்வாறு தேர்தல் நடத்தும் அலுவலர் ஞானம் கூறினார்.

Tags : polling officers ,Thiruvarur district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...