பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முன்பே

தஞ்சை, டிச. 16: தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் சைக்கிள்கள் மழையில் நனைந்து வருகிறது. இதை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு சார்பில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து அதற்கு ஏற்றார்போல் சைக்கிள்களின் உதிரி பாகங்களாக கொண்டு வந்து அதை பள்ளி வளாகத்தில் வைத்து தனியாக ஆட்களை கொண்டு பாகங்களை பொருத்தி வழங்குவர். இந்நிலையில் நடப்பாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக இலவச சைக்கிள்கள் வந்துள்ளன. தஞ்சையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு சைக்கிள்களின் உதிர பாகங்கள் வந்துள்ளன. அதை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையில் அரசர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் வெளிப்பகுதியில் குப்பை போல் போட்டு வைத்துள்ள சைக்கிள் உதிரி பாகங்கள் மழையில் நனைந்து வருகிறது. இதேபோல் புதிய சைக்கிள்களும் பலத்த மழையால் நனைந்து வருகிறது. இதேபோல் போதிய பாதுகாப்பின்றி கிடந்ததால் சைக்கிள்கள் மழையில் நனைந்து துருப்பிடித்துவிடும். மேலும் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு வழங்கிய சைக்கிள்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளால் மூடப்பட்டு வந்துள்ளது. எனவே மாணவர்களுக்கு வழங்குவதற்காக வந்துள்ள இலவச சைக்கிள்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: