வேலூர் கோட்டையில் பைக் ரேஸ் வாலிபர்களுக்கு முற்றுப்புள்ளி ஸ்டீல் தடுப்புகள் போடப்பட்டது

வேலூர், டிச.16:வேலூர் கோட்டையில் பைக் ரேஸ் செல்லும் வாலிபர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஸ்டீல் தடுப்புகளை அமைத்து தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.வேலூர் கோட்டை மதில்சுவர் மீதும், கோட்டை வளாகத்திலும் தினமும் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் கோட்டை வளாகத்தில் வாலிபர்கள் சிலர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பைக் ரேஸ் செல்வதால் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் அச்சமடைந்தனர். எனவே, பைக் ரேஸ் செல்லும் வாலிபர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.அதன்படி, கோட்டை வளாகத்தில் பழைய தாலுகா அலுவலக கட்டிடம் அருகிலும், காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தின் எதிரிலும் ஸ்டீல் தடுப்புகள் அமைத்து தொல்லியல் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மேல் யாரும் பைக்கில் செல்ல முடியாது. நடந்து செல்ல மட்டுமே முடியும். இதனால், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.ஏற்கனவே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நடைபயிற்சி செய்பவர்களுக்காக கோட்டை மதில் சுவர் மீது இருந்த புதர்கள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: