பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை குறைக்க புதிய திட்டம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பள்ளிகொண்டா, டிச.16: பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை குறைக்க புதிய தீட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சையடைந்துள்ளனர்.இந்திய முழுவதும் சுமார் 540 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இவற்றை கடந்து செல்வதற்கான வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதற்கு முடிவு கட்டும் வகையில் நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தானியிங்கி சுங்க கட்டணம் வசுலிக்கும் திட்டத்தை (பாஸ்டேக்) அமுல்படுத்த திட்டமிட்டது.இந்த முறையை பயன்படுத்துவோர் எந்த சுங்கச்சாவடிகளிலும் தங்களது வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதற்காக பிரத்யேமாக பாஸ்டேக் என்ற வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் செல்வதற்கு பாஸ்டேக் என்ற கார்டை பயன்படுத்த வேண்டும்.

இந்த கார்டை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாங்கி கொள்ளலாம். மேலும், ஆன்லைனிலும் இதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு வங்கியின் மூலமாக பணம் செலுத்தி ரீ-சார்ஜ் செய்து கொள்ள வேண்டும். இதை ஆக்டிவேட் செய்வதற்கு வாகனத்தின் ஆர்சி, உரிமையாளரின் போட்டோ, லைசென்ஸ், பான் கார்ட் போன்ற விபரங்கள் கேஒய்சி படிவமாக இருக்க வேண்டும்.இதையடுத்து, பாஸ்டேக் வாடிக்கையாளர்கள் டெபிட், கிரிடிட் கார்ட் மற்றும் நெட் பேங்கிங் போன்ற ஆன்லைன் சேவைகள் மூலமாகவும் பணத்தை செலுத்தி ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். பிறகு அந்த கார்டை தனது வாகனத்தில் உள்ள கண்ணாடியில் பொருத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு ரீ-சார்ஜ் செய்யப்பட்ட கார் சுங்கச்சாவடியில் நுழைந்த உடன் அங்கு பொருத்தபட்டுள்ள இயந்திரம் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தின் வருகையை அறிந்து பதிவு செய்து விடும். பிறகு நாம் முன்பு ரீ-சார்ஜ் செய்து வைத்திருந்த பணத்தில் இருந்து அந்த சுங்கச்சாவடியை பயன்படுத்தியற்கான கட்டணம் கழிக்கப்படும்.

அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பு கம்பு தானாக திறந்து வாகனம் செல்வதற்கு வழி கொடுக்கும். இந்த நடைமுறையால் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் அவசியம் ஏற்படாது.இதற்கு முன்னதாக சுங்கச்சாவடியில் செல்லும் வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதற்காக வரிசையில் காத்திருந்து பணத்தை செலுத்தி வந்தனர். மேலும், சில நேரங்களில் கணினிகள் பழுதடைந்தால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.இதனை தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடியில் பணம் செலுத்துவதற்கு வாகனத்தை நிண்ட நேரம் நிறுத்தாமல் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை தடையில்லாமல் பயணிக்க பாஸ்டேக் திட்டத்தை நாடு முழுவதும் கடந்த 1ம் தேதியில் இருந்து செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று முதல் (15ம் தேதி) பாஸ்டேக் திட்டத்தை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதன்படி, நேற்று முதல் இத்திட்டம் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டது.இருப்பினும் சில வாகன ஓட்டிகள் பணம் செலுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பள்ளிகொண்டா சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் உபயோகிப்பவர்களுக்கு தனி பாதையும், பணம் செலுத்துபவர்களுக்கு தனி பாதை என தேசிய நெடுஞ்சாலைகளின் இருபக்கமும் 1 கிமீ துாரத்திற்கு முன் வழியை பிரித்து அமைத்துள்ளனர்.இதனால், சுங்கச்சாவடியில் காத்திருந்து வாகன நெரிசலில் சிக்காமல் செல்வதால் தங்களின் பயணம் விரைவாக செல்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Related Stories: