பாண்டவர்மங்கலம் கண்மாய் கரைகளில் மரக்கன்று நடும்விழா

கோவில்பட்டி, டிச. 16: கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் கிராம கண்மாய் கரைகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பாண்டவர்மங்கலம் கிராமத்தில் கண்மாய் கரையோரரங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ரோட்டரி சங்க பசுமை  இயக்க பிரிவு தலைவர் ரவிமாணிக்கம் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட  முன்னாள் துணை ஆளுநர் சீனிவாசன், முன்னாள் தலைவர் பாபு  முன்னிலை  வகித்தனர். பாண்டவர்மங்கலம் நலச்சங்க தலைவர் ராஜா வரவேற்றார். இதையடுத்து  ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், கண்மாய் கரையோரங்களில்  மரக்கன்றுகள் நடுதலை துவக்கிவைத்தார். இதில் ரோட்டரி சங்க  நிர்வாகிகள் முத்துமுருகன், நடராஜன், பிரபாகரன், ஜீவஅனுக்கிரக அறக்கட்டளை  நிறுவன தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர் செந்தில்குமார், பாண்டவர்மங்கலம்  நலச்சங்க  உறுப்பினர்கள் லட்சுமணன், கண்ணன், முத்துகுமார் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.பாண்டவர்மங்கலம் கண்மாய் கரையோரங்களில் 200க்கும் மேற்பட்ட புல்கள், வேம்பு  போன்ற பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன.  சங்கச் செயலாளர் முத்துராஜ் நன்றி கூறினார்.

Related Stories: