ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்

புதுக்கோட்டை, டிச. 16: தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தேர்தலில் பணியாற்றும் பூத் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் நடந்தது.  தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கான ஊரக  உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி இத்தேர்தலில் பணியாற்றும் வாக்குசாவடி  அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாநிலம் முழுவதும் துவங்கியது. இதே போல் தூத்துக்குடி மாவட்டத்திலும் புதுக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயிற்சி முகாம் நடந்தது. புதுக்கோட்டை மங்களகிரி  செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடந்த பயிற்சி முகாமுக்கு கிராம ஊராட்சி தலைவர்,  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரான பிடிஓ சுடலை  தலைமை வகித்தார். தூத்துக்குடி கிராம ஊராட்சிகளுக்கான பிடிஓ பானு முன்னிலை வகித்தார். இதில் வாக்குபெட்டியை தயார் செய்வது. 4 வகையான  தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்துவது. தேர்தலில்  பூர்த்திசெய்ய வேண்டிய படிவங்கள், அதற்குரிய உறைகள் தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான  தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டரின் நேர்முக  உதவியாளரான (சத்துணவு) சிதம்பரம் பயிற்சி அளித்தார். மேலும், பயிற்சி நடைபெற்ற  இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

 ஏற்பாடுகளை  துணை பிடிஓ பழனி கார்த்திகேயன், உதவியாளர் சுதாகர், சாமுவேல் உள்ளிட்ட  அலுவலர்கள் செய்திருந்தனர்.கோவில்பட்டி: கோவில்பட்டி லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில்  கோவில்பட்டி கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன், பிடிஓக்கள் மாணிக்கவாசகம்,  வசந்தா, மேலாளர் குமரன், திட்ட மேலாளர் சுப்பையா  உள்ளிட்டோர் பூத்களில் பணியாற்றும் 900க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஆசிரியர்ளுக்கு பயிற்சி அளித்தனர். விளாத்திகுளம்: விளாத்திகுளம், புதூர் ஒன்றியங்களில் பூத்களில் பணியாற்ற உள்ள தலைமை அலுவலர் மற்றும் நிலைய அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. விளாத்திகுளம்  அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இம்முகாமுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்  உமாசங்கர் தலைவர் வகித்தார். பிடிஓ தாமோதரன், துணை  பிடிஓ கோபு உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இதில் பிடிஓ தங்கவேல், முத்துகுமார் உள்ளிட்ட வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள்  மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். புதூரில்  நடந்த முகாமிற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவன் தலைமை வகித்தார். பிடிஓக்கள் நவநீதகிருஷ்ணன், சிவபாலன் பயிற்சி வழங்கினர். இதில் 6  வாக்குச்சாவடி அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள், வாக்குப்பதிவின் முடிவில்  செய்ய வேண்டிய கடமைகள், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் வாக்களிக்கும்   முறை குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயிற்சி நடைபெற்ற  இடங்களில் மாதிரி வாக்குச்சாவடி மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories: