விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 8,694 பேர் எழுதினர்

விழுப்புரம்,  டிச. 16: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய  திறன் தேர்வினை 8, 694 பேர் எழுதினார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  முனுசாமி தேர்வை ஆய்வு செய்தார். தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு  உதவி தொகைக்கான திட்டத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது. அதன்படி  விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 தேர்வு மையங்களில் நடந்தது.  இந்த தேர்வுக்கு மொத்தம் 8,962 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி நேற்று  காலை 9.30 மணிக்கு இந்த தேர்வு தொடங்கியது. பிற்பகல் 1 மணிவரை நடந்தது.  விழுப்புரம் நகரில் காமராஜர் நகராட்சி ஆண்கள்மேல்நிலைப்பள்ளி,  அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, எம்ஆர்ஐசி ஆர்சி பள்ளி, வளவனூர்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் பிலோமினாள் அரசு  மகளிர்மேல்நிலைப்பள்ளி, மரக்காணம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர்  கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தியாகதுருகம் அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி  உள்ளிட்ட 30 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில்  8,694 பேர் மட்டும் கலந்து கொண்டனர். 268 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.  தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி மற்றும்  மாவட்டகல்வி அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

Related Stories: