×

பிரபல சுற்றுலாத்தலமான எக்கோ பாயிண்ட் பகுதியில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

மூணாறு,டிச.16: மூணாறில் சுற்றுலா திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட முக்கிய அணைக்கட்டுகளில் பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிய துவங்கியுள்ளது. சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களால் மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் பகுதிகள் பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்து காணப்படுகிறது .எனவே, மாட்டுப்பட்டி குடிநீர்வாரிய அதிகாரிகள் கழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.உலக வரைபடத்தில் தனக்கென்று முத்திரை பதித்த மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட் பகுதிகள். எழில்மிகு அணைக்கட்டு, அப்பகுதியில் சிந்திக்கிடக்கும் இயற்கை அழகு போன்றவற்றை ரசிக்க உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினர் என தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.இப்படி இவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் எக்கோபாயிண்ட் பகுதியில் குவியத் துவங்கியுள்ளது. பயணிகள் பயன்படுத்திய பிறகு விட்டுச் செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் எக்கோ பாயிண்ட் பகுதியில் உள்ள பாலத்தில் விட்டுச் செல்வதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.குப்பைகள் கொட்டுவதற்காக குப்பைத் தொட்டிகள் இந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்தும் பயணிகள் குப்பைகளைக் கொட்டுவதால் அணைக்கட்டில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் குவியலாக காணப்படுகிறது.

இவ்வாறு குவிந்து கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அணைக்கட்டில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என்றும், பிரபல அணைக்கட்டாக கருதப்படும் மாட்டுப்பட்டி, எக்கோ பாயிண்ட் பகுதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து தேவிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில், ``ஜன.1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வரும் நிலையில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு தீர்வு காணும் விதமாக தேவிகுளம் பஞ்சாயத்து சார்பாக மாட்டுப்பட்டி அணை மற்றும் எக்கோ பாயிண்ட் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறி கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.


Tags : tourist spot ,
× RELATED 9 மாதங்களாகியும் திறக்கப்படாத தலையணை..!...