×

காரைக்குடியில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் தொழில்வணிகக்கழகம் முதல்வரிடம் மனு

காரைக்குடி, டிச.16: காரைக்குடியில் சட்டக்கல்லூரி, குன்றக்குடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி, கானாடுகாத்தானில் வேளாண்மை ஆராய்ச்சி பயிற்சி கல்லூரி துவங்க வேண்டும் என தொழில்வணிகக்கழகம் சார்பில் முதல்வரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி தொழில்வணிகக்கழகம் சார்பில் தலைவர் சாமிதிராவிடமணி தலைமையில், துணைத்தலைவர் பெரியதம்பி, இணைச்செயலாளர்கள் கந்தசாமி, நாச்சியப்பன், சையது, லையன்ஸ் கண்ணப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காரைக்குடியில் 75 சதவீத சிவில் வழக்குகள் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் இருப்பதால், காரைக்குடியில் புதிய சப்கோர்ட் நிறுவவேண்டும். இப்பகுதியில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும். குன்றக்குடியில் கால்நடை மருத்துவக்கல்லூரி, கானாடுகாத்தானில் வேளாண்மை ஆராய்ச்சி பயிற்சி கல்லூரி துவங்க வேண்டும். அமராவதிபுதூரில் 50 ஏக்கர் நிலத்தில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையை பொதுமருத்துவமனையாக மாற்ற வேண்டும். நகர் பகுதியில் வாகனம் அதிகஅளவில் அதிகரித்துள்ளதால் விபத்துகளை தவிர்க்க திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்டு அமைக்க வேண்டும். அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுவதால் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ள புதிய 6 பாடத்திட்டத்தை அனுமதிக்க வேண்டும். சம்பை ஊற்றை பாதுக்க வேண்டும் என
தெரிவித்துள்ளனர்.

Tags : Law College ,Karaikudi ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...