பழநியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 449 வழக்குகளுக்கு தீர்வு

பழநி, டிச. 16: பழநியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 449 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.பழநி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. பழநி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான கோதண்டராஜ், குற்றவியல் நடுவர் நீதிபதி ரகுபதி ராஜா, குற்றவியல் விரைவு நீதிபதி மணிகண்டன், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 4 சொத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.13 லட்சம் வழங்கப்பட்டது. இதில் 458 நீதிமன்ற வழக்குகள் மற்றும் 41 வங்கிக்கடன் வழக்குகளில் ரூ.3 கோடி தொகைக்கு தீர்வு காணப்பட்டதாக பழநி வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: