குப்பை கழிவுகளை தரம் பிரிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் பயிற்சி வகுப்பு: அதிகாரிகள் திட்டம்

சென்னை: குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சி துப்புரவு ஊழியர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. குறிப்பாக உரம் தயாரிக்கும் முறை, உயிரி இயற்கை எரிவாயு தயாரிப்பு மையம்,  மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்ய சிறப்பு மையம், பைராலிஸ் முறையில் எரியூட்டும் மையம் ஆகிவை மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை சேகிரிக்க செல்லும்போது 60 சதவீதம் பேர் மட்டுமே குப்பைைய தரம் பிரித்து வழங்குகின்றனர். எனவே, குப்பை மறுசுழற்சி செய்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்துவருகிறது.  அதன்படி, குப்பையை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியதாவது: திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘டிராஷோனாமிக்ஸ்’ என்கிற புதிய பாடத் திட்டம் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. வரும் ஜனவரி 1 முதல் முதல்கட்டமாக 50 மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ெபங்களூருவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் தயார் செய்துள்ள பாடத் திட்டத்தை கொண்டு சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழில் தயார் செய்யப்பட்டுள்ள இந்த பாடத்திட்டத்தில் குப்பையை மறுசுழற்சி செய்தல், தரம் பிரித்து அளித்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக வாரத்திற்கு ஒரு முறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதை தொடர்ந்து மாநகராட்சியின் கீழ் உள்ள 281 பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

Related Stories: