×

முகப்பேர் மெடிக்கலில் நுழைந்து கத்திமுனையில் தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற ஆசாமிகளுக்கு வலை

சென்னை: முகப்பேர் மேற்கு பஸ் டிப்போ அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பில் நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 2 பேர், தூக்க மாத்திரைகள் வேண்டும், என கேட்டுள்ளனர். அதற்கு கடை ஊழியர்கள், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மாத்திரை வழங்க முடியாது என்றனர். உடனே, கடைக்குள் நுழைந்த ஆசாமிகள், கத்தி முனையில் ஊழியர்களை மிரட்டி, அங்கிருந்த தூக்க மாத்திரைகளை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* முகப்பேரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சூரியராஜ் (25) என்பவர், சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரை சரமாரி தாக்கி, அவரது விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.
* கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமலை வாசன் (30) என்பவரை சரமாரி தாக்கி, ₹60 ஆயிரத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.
* முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்த கார் டிரைவர் அன்பழகன் (43) என்பவரை முன்விரோத தகராறில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய, அதே பகுதியை சேர்ந்த டிங்டாங் ராமு, டிட்டோ உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
* வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பூ வியாபாரி வள்ளியம்மாள் (60), சிட்கோ நகர் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த பைக் மோதி இறந்தார்.
* அண்ணாநகர் சாந்தி காலனியை சேர்ந்த ராஜேஸ்வரி (31) என்பவரின் வீட்டில் 8 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்த குல்பி ஐஸ் வியாபாரி நவஜித் (23) என்பவரின் செல்போனை திருடிய, பக்கத்து விட்டை சேர்ந்த தமிழரசன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள  பெட்டிக்கடையில் மாவா விற்ற முகமது இர்பான் (40) என்பவரை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ மாவா,  300 போதை  பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

21 சவரன் பறிமுதல்

முகப்பேர் மேற்கு பகுதியில் சீனிவாசன்  என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இங்கு சாப்பிட்ட ஆசாமி, பணம் கொடுக்க மறுத்ததுடன்,  கத்தி முனையில் கல்லாவில் இருந்த 350 ரூபாயை பறித்து சென்றார். போலீசார் விசாரணையில், நொளம்பூரை  சேர்ந்த ரவுடி ரமேஷ் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது ெசய்தனர். விசாரணையில், இவர் பல  இடங்களில் வழிப்பறி மற்றும் வீட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரிந்தது.  அவரிடம் இருந்து 21 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Asamis ,
× RELATED குப்பை வண்டியில் பேட்டரி திருட்டு