உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள்

திருச்சி, டிச.13: திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டன. இதுபற்றி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் திமுகவுடன் இணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினளுக்கான இடங்கள் நேற்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 2 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 10 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், மதிமுகவிற்கு ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 7 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 8 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், 5 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும், வி.சிக்கு 2 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: