மண்ணச்சநல்லூர் 18வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் தொற்றுநோய் பரவும் அபாயம்

மண்ணச்சநல்லூர், டிச.13: மண்ணச்சநல்லூரில் சுகாதாரமற்ற குடிநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பகுதி மக்கள் பீதியடைந்து வருகின்றனர். மண்ணச்சநல்லூர் 18வது வார்டில் மக்கள் பயன்படுத்தப்பட்ட பேரூராட்சி முலம் பொது குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய் கழிவுநீர் வாய்க்கால் அருகில் உள்ளதால் குடிநீரும் கழிவு நீரும் கலந்து வருவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூரில் 18வது வார்டில் உள்ள புது காலனியில் தினந்தோறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் விநியோகிக்ப்பட்டு வருகிறது. ஆனால், புது காலனியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் கலந்த குடிநீர் சமையலுக்கும் மற்றும் குடிக்க என அனைத்துக்கும் இந்த நீர் பயன்படுத்தி வருவதால் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: