உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெரு விளக்கு, மயானம் இல்லாத குக்கிராமம்

துறையூர், டிச.13: துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள குண்டக்கல் கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெரு விளக்கு, மயானம் இல்லாமல் பொதுமக்கள் பல ஆண்டுகளாக அவஸ்தைக்குள்ளாகி வருகின்றனர்.  

துறையூர் தொகுதியிலுள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சியில் குக்கிராமமாக உள்ளது குண்டக்கல். இந்த கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் தங்கள் தொழிலாக கூலி வேலை செய்து விவசாயத்தை வாழ்வதாரமாக கொண்டுள்ளனர். இந்த குண்டக்கல் கிராமத்திற்கு தங்கநகரில் இருந்து 2 கி.மீ. நடந்து செல்ல வேண்டும். இது மண் சாலையாக உள்ளது. இச்சாலையின் இருபுறமும் முட்புதர்கள் மண்டி கிடப்பதாலும், சாலை கரடு, முரடாகி கற்கள் ெபயர்ந்து கிடப்பதால் வாகனங்கள் எதுவும் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெருவிளக்கு, மயானம் ஆகிய நான்கும் இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை மோசமாக சேதமடைந்து இருப்பதாலும், தெருவிளக்குகள் இல்லாததாலும் இரவு நேரத்தில் செல்வதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அதிகளவில் புதர்மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் எங்கள் ஊருக்குள் சாலை வசதி சரியில்லாததால் வர முடியாது என்கின்றனர். இதனால் அவர்களை தூக்கி வந்து வேனில் ஏற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

மழைக்காலங்களில் இந்த மண் சாலை பகுதியில் செல்ல முடியாதபடி சேறும் சகதியுமாகி விடுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் செல்ல முடியாதபடி அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாலையின் அரிப்பால் கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாததால் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்து கொள்வதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். வீடு கட்டுவதற்கு லோடு ஆட்டோவில்தான் சிரமத்துடன் கட்டுமான பொருட்களை கொண்டு வருகின்றனர். தற்போது இக்கிராமத்தில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இப்பகுதியினர் 1 கி.மீ. தூரம் கரடு முரடான பாதையில் சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய அவலநிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்காக போடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மின் மோட்டார்கள் 4 வருடங்களாகவே பழுதாகி எந்தவித சீரமைப்பு பணியும் செய்யாமல் அப்படியே ஊராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இது பற்றி பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மயான வசதிகள் இல்லாததால் 3 கி.மீ. தூரம் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய தூக்கிச்சென்று அவதிக்குள்ளாகி வருகிறோம். எங்கள் கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை தீர்த்து தரக்கோரி பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் கிராமம் தற்போது தனித்தீவாக துண்டிக்கப்பட்டது போல் உள்ளது.

புளியஞ்சோலை ஆற்றிலிருந்து எங்கள் ஊரை தாண்டித்தான் அனைத்து ஊருக்கும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் எங்கள் ஊருக்கு இதுவரை புளியஞ்சோலை ஆற்றில் எடுத்துவரும் குடிநீரை குழாய் மூலம் தர ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தெரு விளக்குகள் இல்லாததால் கிராமம் பல ஆண்டு காலமாகவே இருளில் மூழ்கி உள்ளது என வேதனையுடன் குமுறலை கிராம மக்கள் வெளிப்படுத்தினர்.இக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் தற்போதை எதிர்பார்ப்பாய் உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருப்பதால் இப்பகுதியில் அரசியல் கட்சியினர் எப்படி வாக்கு சேகரிப்பார்கள் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

மழைக்காலங்களில் இந்த மண் சாலை பகுதியில் செல்ல முடியாதபடி சேறும் சகதியுமாகி விடுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் செல்ல முடியாதபடி அவதிக்குள்ளாகின்றனர். மேலும் சாலையின் அரிப்பால் கற்கள் பெயர்ந்து நடந்து செல்ல முடியாததால் பள்ளி செல்லாமல் விடுமுறை எடுத்து கொள்வதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் 108 ஆம்புலன்ஸ் வாகனம் எங்கள் ஊருக்குள் சாலை வசதி சரியில்லாததால் வர முடியாது என்கின்றனர். இதனால் அவர்களை தூக்கி வந்து வேனில் ஏற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது.

Related Stories: