×

வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது

கரூர், டிச. 13: வாக்காளருக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது என அனைத்து கட்சி பிரதிநதிகள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கும் வகையிலான கூட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் தலைமை வகித்து பேசியதாவது: டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் நடத்தப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 27ம்தேதி நடத்தப்படும் தேர்தலில் கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், 30ம் தேதி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நான்கு விதமான வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

Tags : voter ,
× RELATED திருவாடானையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி