தோகைமலை ஒன்றியம் பொருந்தலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு சத்யா வேட்பு மனு தாக்கல்

தோகைமலை, டிச. 13: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஒரு மாவட்ட கவுன்சிலர், 15 ஒன்றிய கவுன்சிலர்கள், 20 ஊராட்சி மன்ற தலைவர்கள், 186 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி பொது பெண் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.  இந்நிலையில் பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மனைவி ஆர்.சத்யா பொருந்தலூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதையொட்டி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக பொருந்தலூர் மாரியம்மன் கோயில், சின்னரெட்டிபட்டியில் உள்ள ஆவுடைநாயகி உடனுறை ஆவுடைலிங்கேஸ்வரர் கோயில், பெரிய காண்டியம்மன் கோயில், பொன்னம்பட்டி காளியம்மன் கோயில், தெலுங்கபட்டி பகவதி அம்மன் கோயில், மாசிபெரியண்ணன் கோயில் மற்றும் தோகைமலையில் உள்ள கருப்பசாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் தெலுங்கபட்டியில் இருந்து ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர். இதில் பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள அரண்மனை, முத்துபாலகிரி, பூசாரிபட்டி, செட்டித்தெரு, பூசாரிவீடுகள்தெரு, தெலுங்கபட்டி, ஆதிதிராவிடர் தெரு, அண்ணாநகர் காலனி, எட்டமநாயக்கன்பட்டி, கண்ணல்வடநாயக்கனூர், அப்பாநாயக்கனூர், ராமாநாயக்கனூர், பொம்மாநாயக்கனூர், பாறைபட்டி, உப்பிலிதாதம்பட்டி, சின்னரெட்டிபட்டி, சின்னரெட்டிபட்டி காலனி, பொன்னம்பட்டி, பொன்னம்பட்டி காலனி, அந்தோணியார்புரம் ஆகிய கிராமங்களில் இருந்து ஊர் முக்கியஸ்தர்கள், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags : Satya ,Dokaimalai Union ,
× RELATED மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்ய...