×

கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் க.பரமத்தி ஒன்றியத்தில் மொத்தம் 69 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி ஆண்களை விட பெண்கள் அதிகம்

க.பரமத்தி, டிச. 13: க.பரமத்தி ஒன்றியத்தில் மொத்தம் 69 ஆயிரத்து 152 வாக்காளர்கள் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளன. இதில் அஞ்சூர் ஊராட்சியில் ஆண் 1230, பெண் 1317 என மொத்தம் 2547 பேரும் கார்வழி ஊராட்சியில் ஆண் 548, பெண் 537 என மொத்தம் 1085 பேரும் துக்காச்சி ஊராட்சியில் ஆண் 732, பெண் 742 என மொத்தம் 1474 பேரும், தென்னிலை கிழக்கு ஊராட்சியில் ஆண் 1420, பெண் 1459 என மொத்தம் 2879 பேரும், அத்திப்பாளையம் ஊராட்சியில் ஆண் 860, பெண் 964 என மொத்தம் 1824 வாக்காளர்களும் குப்பம் ஊராட்சியில் ஆண் 1321, பெண் 1464 என மொத்தம் 2785 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.

புன்னம் ஊராட்சியில் ஆண் 2123, பெண் 2352 என மொத்தம் 4475 பேரும், பவித்திரம் ஊராட்சியில் ஆண் 2266, பெண் 2527 என மொத்தம் 4793 பேரும், விஸ்வநாதபுரி ஊராட்சியில் ஆண் 451, பெண் 558 என மொத்தம் 1009 வாக்காளர்களும், காருடையம்பாளையம் ஊராட்சியில் ஆண் 807, பெண் 858 என மொத்தம் 1665 பேரும், நெடுங்கூர் ஊராட்சியில் ஆண் 587, பெண் 654, என மொத்தம் 1241,பேரும் க.பரமத்தி ஊராட்சியில் ஆண் 1353, பெண் 1440 என மொத்தம் 2793 பேர் உள்ளனர்.
முன்னூர் ஊராட்சியில் ஆண் 1104, பெண் 1134 என மொத்தம் 2238 பேரும், தென்னிலை மேற்கு ஊராட்சியில் ஆண் 999, பெண் 1033, இதர பாலினம் ஒருவரும் என மொத்தம் 2033 வாக்காளர்களும், மொஞ்சனூர் ஊராட்சியில் ஆண் 1111, பெண் 1209 என மொத்தம் 2320 பேரும், கோடந்தூர் ஊராட்சியில் ஆண் 819, பெண் 885 என மொத்தம் 1704 வாக்காளர்களும் தென்னிலை தெற்கு ஊராட்சியில் ஆண் 1057, பெண் 1120 என மொத்தம் 2177 பேரும் நடந்தை ஊராட்சியில் ஆண் 684, பெண் 722, என மொத்தம் 1406 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

சூடாமணி ஊராட்சியில் ஆண் 932, பெண் 974 என மொத்தம் 1906 பேரும், ஆரியூர் ஊராட்சியில் ஆண் 531, பெண் 562 என மொத்தம் 1093 பேரும் அணைப்பாளையம் ஊராட்சியில் ஆண் 510, பெண் 554 என மொத்தம் 1064 பேரும், தும்பிவாடி ஊராட்சியில் ஆண் 945, பெண் 1053 என மொத்தம் 1998 வாக்காளர்களும், நஞ்சைகாளகுறிச்சி ஊராட்சியில் ஆண் 555, பெண் 560 என மொத்தம் 1115 பேரும் புஞ்சைகாளகுறிச்சி ஊராட்சியில் ஆண் 1661, பெண் 1719 என மொத்தம் 3380 பேர் வாக்காளர்கள் வசிக்கின்றனர் எலவனூர் ஊராட்சியில் ஆண் 575, பெண் 588 என மொத்தம் 1163 பேரும் சின்னதாராபுரம் ஊராட்சியில் ஆண் 3308, பெண் 3606 என மொத்தம் 6914 பேரும் கூடலூர் கிழக்கு ஊராட்சியில் ஆண் 1919, பெண் 2129 என மொத்தம் 4048 வாக்காளர்களும், கூடலூர் மேற்கு ஊராட்சியில் ஆண் 1011, பெண் 1089 என மொத்தம் 2100 பேரும், தொக்குப்பட்டி ஊராட்சியில் ஆண் 708, பெண் 702 என மொத்தம் 1410, வாக்காளர்களும், ராஜபுரம் ஊராட்சியில் ஆண் 1174, பெண் 1339 என மொத்தம் 2513 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags : women ,Rural Local Elections ,CPM ,men ,
× RELATED சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 529...