வாக்குச்சாவடி மையத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு மணக்காட்டு நாயக்கனூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

கடவூர், டிச. 13: கடவூர் அடுத்த மாவத்தூர் ஊராட்சி மணக்காட்டு நாயக்கனூர் கிராம மக்கள் வாக்குச்சாவடி மையத்தை மாற்றியதால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர். கடவூர் ஒன்றியம் மாவத்தூர் ஊராட்சி வார்டு எண் 3ல் மணக்காட்டு நாயக்கனூர் உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இவர்கள் கடந்த தேர்தல் வரை அரை கி.மீ. தூரம் உள்ள கோடங்கிபட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். தற்போது வார்டு சீரமைப்பு செய்ததில் வார்டு எண் 6 ஆக மாற்றி சுமார் 4 கி.மீ. தூரம் உள்ள தாசிரெட்டியபட்டியில் வாக்களிக்குமாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அதிகாரிகளே மாற்றி உள்ளனர். இது சம்பந்தமாக புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் மணக்காட்டுநாயக்கனூர் கிராம மக்கள் வார்டு 3 ஆக மாற்றி மீண்டும் கோடங்கிபட்டி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nayakanur Rural People ,
× RELATED பவானிசாகர் அருகே கிராமத்தில் தேர்தல்...