×

2வது நாளாக கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் செல்லாண்டிபாளையம் அருகில் தடுப்பு சுவர் அகற்றப்பட்ட இடத்தில் பொக்லைன் மூலம் சாலை சீரமைப்பு

கரூர், டிச. 13: கரூர் செல்லாண்டிபாளையம் அருகே தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்ட இடத்தில் சாலையின் தரம் உயர்த்த பொக்லைன் மூலம் அகற்றும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் இருந்து சேலம், மதுரை, திருச்சி பைபாஸ் சாலைகள் இணையும் பகுதி வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகளவு வாகனங்கள் இந்த சாலையின் வழியாக செல்வதால் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து தடுப்புச் சுவர்களும் திடீரென அகற்றப்பட்டது. இதனால் செல்லாண்டிபாளையம், சாலைப்புதூர், சுக்காலியூர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தியிலும், காரணம் தெரியாமலும் இருந்தனர். இதற்கிடையே செல்லாண்டிபாளையம் பகுதியோரம் நன்றாக இருந்த சாலை பொக்லைன் மூலம் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து பணியாளர்களிடம் கேட்ட போது, இந்த சாலையின் சில பகுதிகள் மேடாகவும், பள்ளமுமாகவும் உள்ளன. மேலும் சாலை அமைக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இதுபோன்ற காரணங்களாலும் பழுதடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணிக்காக முதலில் தடுப்புச் சுவர்கள் அகற்றப்பட்டு தற்போது சாலை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளுக்கு பிறகு புதிய பொலிவுடன் சாலையின் தடுப்புச் சுவர் வைக்கப்படும் என்றனர். இருப்பினும், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மிகவும் மோசமாகவும், பயன்படுத்திட முடியாத நிலையிலும் உள்ளது. எனவே இந்த சாலை மீது காட்டும் ஆர்வத்தையும், மற்ற பழுதடைந்த சாலைகளின் மீதும் காட்ட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Chelndipalayam ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது