×

செல்லாயி அம்மன் கோயிலை இடிக்க எதிர்ப்பு கடவூர் ஒன்றியம் பொன்னணியாறு அணையில் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு

கடவூர், டிச. 13: கடவூர் ஒன்றியம் பொன்னணியாறு அணையிலிருந்து அனுமதியில்லாமல் தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னணியாறு அணை கரூர் மாவட்டத்தில் உள்ளடக்கி உள்ளது. இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இங்கு மீன்கள் வளர்க்கப்பட்டு அது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்த அணையில் 55 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம். சமீபத்தில் கடவூர் பகுதியில் பெய்த மழையால் அணை ஓரளவு நிரம்பி உள்ளது. இதனை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக மோட்டார் மூலம் நீர் உறிஞ்சுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடவூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anti-demolition ,Selvai Amman ,
× RELATED கோயில் பூசாரி தற்கொலை