×

தோகைமலை முதலைப்பட்டியில்

தோகைமலை, டிச. 13: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான அரசு குளத்து கரைப்பகுதியில் செல்லாயி அம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் முதலைபட்டி குளத்தில் கோயில் உள்ளதாகவும், குளத்து கரையில் உள்ள கருவறையை தவிர அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உயர;நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் காலக்கெடு கடந்த மாதம் 25ம் தேதி முடிவடைந்ததால் 29ம் தேதி அதிகாரிகள் வந்து கோயிலை ஆய்வு செய்து விட்டு சென்றனர்.

கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் சந்தித்தும் பயன்இல்லை என்பதால் கிராம மக்கள் அனைவரும் செல்லாயிஅம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு காத்திருப்ப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று 2ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தெரிவிக்கும்போது, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் காலஅவகாசம் வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்றத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் பணிந்து கேட்கிறோம் என்றும், அதுவரை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கிராம மக்கள் அனைவரும் கோயிலில் காத்திருப்போம் என்றும் தெரிவித்தனர்.

Tags : Crocodile Togaimalai ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...