×

கைவிடப்பட்ட தனியார் கிணற்றை மூடாததால் கழிவு கொட்டும் இடமாக மாறி வரும் அவலம்

கரூர், டிச.13: கைவிடப்பட்ட தனியார் கிணறை மூடாததால் கழிவு கொட்டும் இடமாக மாறிவருகிறது. சின்னஆண்டாங்கோயில் பகுதியில் வயல் வெளிகள் இருந்தன. தற்போது குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு கைவிடப்பட்ட தனியார் கிணறு ஒன்று உள்ளது. பாதுகாப்பற்ற முறையில் இந்த கிணறு திறந்து கிடக்கிறது. கிணற்றை மூடாதால் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர். சிறுவர்கள் விளையாடும் போது இந்த பகுதிக்கு சென்றால் தவறிவிழும் அபாயம் இருக்கிறது. மேலும் நகர பகுதிக்கு இணையாக இப்பகுதி மாறிவரும் நிலையில் நீண்டகாலமாக கிணறு திறந்தநிலையிலேயே மூடப்படாமல் காணப்படுகிறது. உடனடியாக கிணற்றை மூட வேண்டும். மேலும் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. உள்ளாட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : closing ,well ,wasteland ,
× RELATED தடுப்பு சுவர் சேதமடைந்து உயிர்பலி வாங்க காத்திருக்கும் கிணறு