×

போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால் வாகனஓட்டிகள் அவதி

கரூர், டிச.13: போக்குவரத்து சிக்னல் வேலை செய்யாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கரூர் திருச்சி சாலையில் சுங்ககேட் சந்திப்பு சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த சிக்னல் அவ்வப்போது பழுதாகி வந்தது. தற்போது கடந்த பல நாட்களாக வேலை செய்யவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைவதுடன், குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கின்றி செல்கின்றன. போக்குவரத்து காவலர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் இங்கு நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருந்தும் சிக்னலை தொடர்ந்து பயன்பாட்டில் வைப்பதன் மூலமாகவே இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

Tags : Motorists ,
× RELATED போடி மெட்டுச்சாலையில் சரிந்து விழுந்த பாறைகள் வாகன ஓட்டிகள் கலக்கம்