×

மாவட்டம் படியுங்கள் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்வதால் பலமிழக்கும் அபாயம்

விருதுநகர், டிச.13: விருதுநகரில் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால் பாலம் பலமிழந்து வருகிறது. இதனை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் முறையான பராமரிப்பின்றி பலமிழந்து வருகிறது. விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் லாரிகள், வாகனங்கள் என தினசரி 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.  மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் இருந்தாலும், மேம்பாலத்தின் மேற்புற சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. டூவீலரில் செல்வோர் குழிகளில் சறுக்கி விழுந்து விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் மேம்பாலத்தின் இருபுற ஓரங்களில் மணல் சேர்ந்து கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் மரக்கன்றுகள் முளைத்து வருகின்றனர். பல இடங்களில் 5 அடி உயரத்திற்கும் மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறையினர் மேம்பால சாலையை தரமான முறையில் போடவும், பாலத்தின் வெளிப்பகுதியில் உள்ள மரக்கன்றுகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : District ,Highway ,Virudhunagar-Aruppukkottai Road ,
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...