×

மாலையில் சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் வெளிநாட்டினர் தரிசனம்

வத்திராயிருப்பு, டிச. 13: வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை பவுர்ணமி தலா மூன்று நாட்களும், பிரதோசத்திற்கு 1 நாள் என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இடைப்பட்ட நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடந்த 9ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 9 ம் தேதி பிரதோசம். 11ம் தேதி இரவு கார்த்திகை பவுர்ணமி ஆகிய விஷேச நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். நேற்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யச் சென்றனா். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல் வௌிநாடுகளை சேர்ந்தத ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். நேற்று நிறைவு நாளில் காலையில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 3 வௌிநாட்டினர், அதில் 2 ஆண்கள், 1 பெண் ஆகியோர் சுந்தரமகாலிங்கம் கோயில் மகிமை அறிந்து கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்ததாகவும், தரிசனம் முடித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இருப்பதாக கூறினர். இந்தக்கோவில் மழை மீது அமைந்துள்ளதால் இயற்கை எழில் காட்சிகளோடு இருப்பது பிரமிப்பாக உள்ளது என்றனர். சுவாமியை தரிசித்து எங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்ள உள்ளோம் என்றனர்.

Tags : foreigners ,Chaturagiri Mahalingam Temple ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...