×

உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல் காரியாபட்டி அருகே மல்லாங்கிணரில் கிராம பெண்களுக்கு விழிப்புணர்வு

காரியாபட்டி, டிச. 13: காரியாபட்டி அருகே நடந்த ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காரியாபட்டி அருகே மல்லாங்கிணர் மேலதுலுக்கன்குளம் கிராமத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் மல்லாங்கிணர் எஸ்.ஐ., அசோக்குமார் மரக்கன்றுகள் நட்டு விழாவை துவக்கி வைத்து பேசியபோது, மரம் நடுவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் தொண்டு. மழை பெய்யும், நிலத்தடி நீர்மட்டம் உயரும், விவசாயமும் செழிக்கும். மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள பெண்கள் தனியாக செல்லும் போது வழிப்பறிகள் நடப்பதை தவிர்க்க முகம் தெரியாதவர்களிடம் பேசக்கூடாது. டூவீலரில் வந்து முகவரி கேட்டால் தள்ளி நின்று பதில் சொல்லவேண்டும். பெண் பாதுகாப்பு, கல்வி, குழந்தைகள் திருமணம், பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நட்டு இயற்கை மற்றும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டும் என பேசினார். விழாவில் 1000 மரக்கன்றுகளை நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பங்குபெறும் பெண்கள் மூலமாக நட்டு அதனை தொடர்ந்து நீர்விட்டு பராமரித்து வர முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி செயலர் சீராளன், சமூக ஆர்வலர் மேலதுலுக்கன்குளம் கிருஷ்ணகுமார், காவலர் நாகராஜ், எஸ்.பி. ஏட்டு மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : village women ,Mallanginar ,Kariyapatti ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...