×

உள்ளாட்சி தேர்தல் திமுக நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்

தேனி, டிச. 13: தேனி மாவட்ட திமுக நகர,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. மாவட்ட திமுக பொறுப்பாளர் கம்பம்.என்.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராசன், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் முன்னிலை வகித்தனர். தேனி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன் வரவேற்றார். இக்கூட்டத்தில் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணித் தலைவர் எல்.மூக்கையா, திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கம்பம்.பெ.செல்வேந்திரன், திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக தீர்மானக்குழு இணைச்செயலாளர் எம்.ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பகுதிகள் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி போட்டியிடும் பகுதிகளை அடையாளம் காணுவது குறித்தும், கூட்டணி கட்சியினருடன் பகிர்ந்து கொண்ட இடங்களில் திமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட தகுதியான வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், நகர செயலாளர்கள் கம்பம் துரைநெப்போலியன், சின்னமனூர் முத்துக்குமார், போடி செல்வராஜ், பெரியகுளம் முரளி, கூடலூர் லோகன்துரை, ஒன்றிய செயலாளர்கள் பெரியகுளம் பாண்டியன், சின்னமனூர் அண்ணாத்துரை, உத்தமபாளையம் முருகேசன், கம்பம் செல்லப்பா, க.மயிலாடும்பாறை வக்கீல்.சுப்பிரமணி மற்றும் பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேனி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

Tags : election ,DMK executivesAllocation ,meeting ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...