×

ஊரக உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சேலம், டிச.13: சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்,  சென்னை மற்றும் 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில்  இரண்டு கட்டமாக நடக்கிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுக சார்பில்  போட்டியிட  விருப்பமனு பெறப்பட்டது. தொடர்ந்து, சேலம் மத்திய மற்றும்  கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம், நேர்காணல்  நடத்தப்பட்டது. இதையடுத்து சேலம் மத்திய, கிழக்கு மாவட்ட திமுக சார்பில்  போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான  அறிவிப்பை மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  வீரபாண்டி ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Tags : DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி