தெருநாய் கடித்து 3 ஆடுகள் பலி

இடைப்பாடி, டிச.13: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி பெரியகாடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னுசாமி(46), விவசாயியான இவர் வீட்டில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஆடுகள் அபயகுரல் எழுப்பியுள்ளன. இதனைக்கேட்டு அதிர்ச்சிக்குள்ளான சின்னுசாமி வீட்டின் பின்புறம் உள்ள ஆட்டுப்பட்டிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அங்குள்ள மாடு ஒன்றை கடித்து குதறிய தெருநாய் ஒன்று, ஆடுகளையும் கடித்துக் கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே, அந்த நாளை தூரத்தி விட்டு ஆடுகளை மீட்டுள்ளார். ஆனால், ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே பலியானது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியண்ணன் என்பவரது வீட்டிலும் 2 ஆடுகளை தெருநாய் கடித்து குதறியதில் உயிரிழந்துள்ளது. தெருநாய் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>